அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு..,

வாஷிங்டன்: ”ஏமாற்றும் நாடுகளால், அமெரிக்காவின் வளம் சுரண்டப்படுகிறது. அமெரிக்காவை காப்பாற்ற, உள்நாட்டு உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை, மீண்டும் இங்கு, ஏற்படுத்துவோம்,” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என, உறுதியளித்தார். இதைதொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், ‘அவுட் சோர்சிங்’ முறையில் வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பை தருவதை தடுக்கும் சட்டம், அந்த நாட்டு பார்லிமென்ட்டில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் ஆலோசனை கூட்டம், வாஷிங்டனில், அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்தது. இதில், அதிபர் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவில், உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்; இவற்றை வெளிநாடுகள், நம்மிடம் இருந்து தட்டி பறிக்கின்றன. அமெரிக்காவின் வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் அந்த நாடுகள், நம் வளத்தை சுரண்டுகின்றன. அமெரிக்க நிறுவனங்கள், நம் நாட்டு மக்களுக்கே வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். ‘அமெரிக்காவில் தயாரிப்பு’ என்பது நம் இலக்கு. என்று கூறினார்.

author avatar
Castro Murugan

Leave a Comment