அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் விவரம் ;

பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதையடுத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுக்குழு தீர்மானம் விவரம்:

அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் சசிகலா நீக்கப்பட்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 
 
எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததை பாராட்டி தீர்மானம் வாசிக்கப்பட்டது. 
டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள், நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் தொடர்வார்கள் என பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று தீர்மானம் வாசிக்கப்பட்டது.
ஜெயலலிதா வீட்டை நினைவில்லம் ஆக்கும் அரசின் முடிவை ஆதரித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட பொதுக்குழுவில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிவரும் தமிழக அரசுக்கு பாராட்டு அளிக்கப்பட்டது. 
ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவிடம் அமைக்க முடிவு செய்ததால் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இனிமேல் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என்று தீர்மானம் வாசிக்கப்பட்டது.
பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்புக் குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கமும் இடம்பெற்றுள்ளார்.
சசிகலாவின் அதிகாரங்கள் அனைத்தும் பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
அதிமுகவின் சட்டவிதி 19-ல் திருத்தம் செய்யப்படுவதாக தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறப்படும் :   மேலும் தேர்தல் கமிஷனில் தரப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 
பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment