அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பவர்களாக இளம் அதிகாரிகள் இருக்க வேண்டும்:ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

புதுடில்லி: ‛பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்க வேண்டும்’ என தனது முதல் அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இளம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஐ.எப்.எஸ்., பயிற்சி முடித்து பணியில் இணையும் இளம் அதிகாரிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தினர். இதில் அவர் பேசியதாவது: காடுகளில் வசிக்கும் பழங்குடியினரும், மக்களும் கடின உழைப்பாளிகள். அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்யுங்கள். வனத்தை பாதுகாப்பது உங்கள் கடமை.உணவுக்காக காடுகளையும், காட்டு விறகுகளையும் நம்பி இருக்கும் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உறுதி கொள்ளுங்கள். இயற்கை வளங்களை பாதுகாப்பதில் சமநிலையை கடைபிடிக்க வேண்டும்.பிரச்னைகளை உருவாக்குவதைவிடுத்து, அவற்றுக்கு தீர்வு காண்பராக இருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி பதவியேற்ற பின் கலந்து கொண்ட முதல் அதிகாரபூர்வ நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan

Leave a Comment