டிரம்பின் பைத்தியக்காரத்தனம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தல் சே_குவேரா மகள் அலெய்டா பேச்சு!

அமெரிக்க ஜனாதிபதிடிரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமே அழிந்துவிடும் ஆபத்து நிலவுவதாக சேகுவேராவின் மகள் அலெய்டா எச்சரித்துள்ளார்.அர்ஜெண்டினாவைச் சேர்ந்த புரட்சியாளர் சேகுவேரா, பிடல்காஸ்ட்ரோவுடன் சேர்ந்து கியூபாவின் விடுதலைக்காக போராடினார். அதில் வெற்றிபெற்ற அவர்,உலகத்தில் ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் சிக்கித்தவிக்கும் ஒவ்வொரு நாடும்விடுதலைப்பெற வேண்டும்என்ற மாபெரும் லட்சியத்தின் அடிப்படையில், பொலிவியா சென்றார். அவரை, 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம்தேதி கைதுசெய்த அமெரிக்கக் கைக்கூலி ஆட்சியாளர்களின் படைகள், படுகொலை செய்தன. அவர் கொல்லப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கியூபாவில் சாண்ட்டா கிளாராவில் உள்ள சே குவேராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்.

இதில் கியூபா அதிபர் ரவுல்_காஸ்ட்ரோ மற்றும் பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கியூப தலைநகர் ஹவானாவில் சே குவேராவின் மூத்த மகள்- 57 வயதான அலெய்டா குவேரா செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அமெரிக்கஜனாதிபதி டெனால்டுடிரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமேஅழிந்துவிடும் ஆபத்து நிலவுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், நாம் மனித குலத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதுதான் ட்ரம்புக்குப் பிரச்சனை என்றும், பைத் தியக்காரத்தனம் அதிகம் உடைய ஒருவரிடம் அமெரிக்காவை ஆளும் அதிகாரம் கிடைத்ததால், இன்றுபிரச்சனைகள் அதிகரித் துள்ளதாகவும் தெரிவித்தார்.நாம் வசிக்கும் உலகையே நாம் அழிக்கிறோம் என்பதை அறியாதவராக டிரம்ப் உள்ள நிலையில், மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது;

நமக்கு அதிக நேரம் இல்லை எனவும் கியூப மக்களுக்கு எடுத்துரைத்த அலெய்டா குவேரா, 1961-ஆம் ஆண்டு கியூபாவுடன் கைவிடப்பட்ட ஒப்பந்தத்தை 2014-ஆம் ஆண்டு பாரக்ஒபாமா மறுபரிசீலனை செய்ததை, ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்ததையும், ஜனாதிபதியான பின்பு தொழில் ரீதியிலான கியூபபயணத்துக்கு டிரம்ப் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், ட்ரம்பின் இந்தகட்டுப்பாடுகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றத்தை தேடுவதற்கான நேரம் இது;நோயைக் குணப்படுத்துவதை விட நோய் வரும் முன் தடுக்க வேண்டும் என்பதே கியூபாவின் கொள்கை என்றும் அலெய்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.