சியான் விக்ரமின் “துருவநட்சத்திரம்” மூன்று பாகமாக வெளிவரும் உறுதி செய்தார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்…..!

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படமான ” துருவநட்சத்திரம்” குறித்து பிரபல நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது:நாட்டிற்கு எதிரான சதித்திட்டத்தை முறியடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் படம் போன்று இப்படம் உருவாகியிருக்கிறது என்று அப்படம் பற்றி பேசிய தொடங்கிய அவர், ‘இப்படத்தில் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான ஒன்பது ஏஜெண்டுகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து அதைப் பாதுகாக்கும் படம் இது.மேலும் ஒரு முத்தொகுப்பாக அதை நான் உருவாக்கியிருக்கிறேன் மற்றும் மூன்று பகுதியாக இந்த திரைப்படத்தை வெளியிடவும் நான் திட்டமிட்டிருக்கிறேன்.மேலும் துருவநட்சத்திரம் வரும் ஏப்ரல் 2018 ல் திரைக்குவரும் எனவும்,அதன் அடுத்த அடுத்த பாகங்கள் இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்படும்.

அதற்கான சுவரொட்டிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன: சியான் விக்ரம் தனது பாணியிலே ஸ்டைலான அவதாரங்களுடன் தலைகீழாக மாறி நடித்து வருகிறார்.மேலும் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் “என்னை நோக்கி பாயும் தோட்டா”வின் படப்பிடிப்பு நீண்டகாலமாக நடந்து கொண்டே இருகின்றது என கவுதம் மேனன் கூறியுள்ளார்.ஆனால் ‘நாங்கள் 15 நாட்களுக்கு மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம்.சியான் விக்ரமின் “துருவநட்சத்திரம்” திரைக்குப் பின் ஒரு மாதம் கழித்து நாங்கள் “என்னை நோக்கி பாயும் தோட்டா(ENPT)” ஐ வெளியிடுகிறோம்,எனவும் இயக்குனர் ‘கௌதம் கூறினார்.

ஒன்றாக என்டர்டெயின்மென்ட்(Ondraga Entertainment) தயாரிக்கும்
துருவநட்சத்திரத்தில் சியான் விக்ரம் ஒரு சர்வதேச புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ‘பெல்லி சோப்புப்பு’ புகழ் நடிகை ரிது வர்மா,பார்த்திபன்,சிம்ரன்,ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதற்கு ஒளிபதிவாளராக ஜோமன் T ஜான், மனோஜ் பரமஹம்சா ஆகிய இருவரும் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.