ப்ளூவவேல் விளையாட்டை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ப்ளூவவேல் விளையாட்டை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர்கள் ராம்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஸ்டாலின். ப்ளூவேல் விளையாடியதால் மதுரை திருமங்கலம் அருகே மாணவர் விக்னேஷ் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அபாயகரமான விளையாட்டை தடை செய்து நாட்டின் எதிர்கால சிற்பிகளான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். ப்ளூவேலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை அமைச்சகம் முடக்க வேண்டும் என ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment