காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு: பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் தற்கொலை முயற்சி!

0
111
திருச்சி: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பயிற்சி எஸ்ஐகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளராக திருச்செந்தூரில் உள்ளார்.
இதேபோல் திருச்சி பகுதியைச் சேர்த்தவரான வைத்தீஷ்வரி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காவல் நிலையத்தில் காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளராக உள்ளார். பயிற்சி ஆய்வாளர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்த வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்கவில்லை. குடும்பத்தினர் காதலுக்கு எதர்ப்பு தெரிவித்ததால் கார்த்திக் மற்றும் வைத்தீஸ்வரி இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றனர்.
இதையடுத்து இருவரையும் மீட்கப்பட்டு திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பயிற்சி எஸ்ஐகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here