ஒட்டப்பிடாரத்தில் கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி செல்லும் சாலையில் ஏ.கே.எஸ் நகரில்  அரசு மதுபானக் கடை  கடந்த சில மாதங்களாக செயல் பட்டு வருகிறது.

மது கடையை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் மூன்றாவது நாளாக  ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள்,மாதர் சங்கத்தின் மாநில பொருளாளர் மல்லிகா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரவேல் ,மாவட்ட குழு உறுப்பினர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனா். இன்று கொட்டும் மழையில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Leave a Comment