இசையமைப்பாளராக அவதாரமெடுத்த சிம்புக்கு கைக்கொடுப்பார்களா… அல்லது காலை வாரி விடுவார்களா…..?

சென்னை:இசையமைப்பாளர் என்ற அடுத்த அவதாரத்தில் குதித்துள்ள சிம்புவுக்கு ரசிகர்கள் கைக்கொடுப்பார்களா… அல்லது காலை வாரி விடுவார்களா என்பது தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருந்தார் நடிகர் சிம்பு. ஆனால் இந்த இமேஜ் சமீபத்தில் வெளியான AAA படத்தால் உடைந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததையும், சிம்புவின் உடல் எடை அதிகரித்தது பற்றியும் பல விமர்சனங்கள் வெளியானது.
அவ்வளவுதான் சிம்பு தனது உடல் எடையை குறைத்து தனது புதிய தோற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் ஆங்கிலப்படத்தில் நடிப்பதாகவும், மணிரத்னம் படத்தில் புக் ஆகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் சிம்பு இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் இருந்து கலக்கு மச்சான் என துவங்கும் சிங்கிள் டிராக் ஒன்று வரும் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஹிட் அடித்து சிம்புவை மகிழ்ச்சிப்படுத்துவார்களா ரசிகர்கள்.

Leave a Comment