அடுத்த முதல்வர் விஷால் தான் கொக்கரிக்கும் விஷால் புரட்சி படை…! இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ…!

திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்குவதற்காக சம்மந்தப்பட்ட அமைச்சர் தரப்பில் மிகப்பெரிய தொகையை லஞ்சமாக வாங்கி வந்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.க்குப் பிறகு தமிழக அரசு வசூலித்துவந்த கேளிக்கைவரி முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அதே கேளிக்கை வரியை வேறு பெயரில் வசூலிக்கும் முயற்சியில் இறங்கியது தமிழக அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ந்து, தமிழகஅரசு நடத்திய பேச்சுவார்த்தையில், 30 சதவீத கேளிக்கை வரியை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனால் டிக்கெட் கட்டணத்துடன் ஜிஎஸ்டி மட்டும் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ் மொழி படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இது கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இதற்கு தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேளிக்கை வரி அமலுக்கு வந்திருப்பதால், புதிய கட்டண நிர்ணயம் தொடர்பாக வரும் 4-ம் தேதி முடிவு செய்ய உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து கருத்து தெரிவித்தார்.
“திருட்டு விசிடியை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத அரசு, கேளிக்கை வரி விதித்திருக்கிறது.
மாநகராட்சி கேளிக்கை வரி கூடாது என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்தும், தற்போது கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருட்டு விசிடியைத்தாண்டி இன்னொரு சுமை, தயாரிப்பாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்கள்போல, ஜிஎஸ்டி வரி மட்டுமே இருக்க வேண்டும்; கேளிக்கை வரி கூடாது என்று மீண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.”
விஷாலின் கருத்து இப்படி இருக்க, அவரது அடிபொடிகள் அநியாயத்துக்கு கொந்தளித்து விஷாலுக்குக் கெட்டபெயரை தேடிக் கொடுத்து வருகின்றனர்.
கேளிக்கை வரி தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திரைத்துறையினரின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவானது.
அப்போது விஷாலின் அடிபொடிகள் சிலர், நாளைய முதல்வர் விஷால் என்று பத்திரிகைகளில் கொடுத்த விளம்பரம் ஆட்சியாளர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
விளைவு. அடுத்தநாளே அரசாங்க வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது.
அந்தப் பிரச்சனையே இன்னும் தீரவில்லை.
இந்நிலையில் விஷாலின் அடிபொடிகளில் ஒருவரும், ரட்சகன், ஜோடி, புலிபார்வை போன்ற படங்களை இயக்கிய பிரவீண்காந்த் ஒரு குரல்பதிவை வாட்ஸ்அப்பில் வெளியிட்டிருக்கிறார்.
விஷால் சார்பில் பேசுவதாக சொல்லும் பிரவீண்காந்த் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதோடு,
“விஷால் ஒரு இளைஞர். திருமணமாகாதவர். அவரது போராட்டத்தை தீவிரப்படுத்திடாதீங்க. கமல், ரஜினி எல்லாம் அவங்க போராட்டத்தை தீவிரப்படுத்திட்டாங்க. விஷாலும் தீவிரப்படுத்தினால். அது எங்கேயோ போய் விட்டுவிடும்.”
என்றும் அரசாங்கத்தை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment