நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க தயார்…. ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் சவால்….!

தமிழக அரசின் மீது சட்டப் பேரவையில் திமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க அதிமுக தயாரிக உள்ளதாக  அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையில், முதலமைச்சர் பழனிசாமி அரசின் மீது, தேவை ஏற்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார். 3 அணிகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வு தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்க்க தயார் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment