குர்மீத் ராம் வளர்ப்பு மகள் கைதாகிறார்

ரோத்தக்,  –

பெண்கள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில், சாமியார்குர்மீத் ராமிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்ட னை விதிக்கப்பட்டு, ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரித் இன்சாம் மீதுதேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் குர்மீத் ராமை, பஞ்ச்குலாநீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு, ஹனிபிரித் இன்சாம் சதித்திட்டம் தீட்டியதாகவும், சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் சண்டையிட்டதாகவும் கூறி ஹரியானா போலீசார் இவ்வழக்கை பதிவு செய்து ள்ளனர். ஹனிபிரித்தை கைது செய்யவும் முடிவுசெய்துள்ள போலீசார், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை (லுக்-அவுட்) நோட்டீஸ்அனுப்பியுள்ளனர்.

Leave a Comment