லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கான சில டிப்ஸ் !

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் Desktop கம்ப்யூட்டர்களைவிட மடிக்கணினி (Laptop), டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த ஆசைபடுகின்றனர். ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவு பற்றி இங்கு காண்போம், 
மடிக்கணினியில் இருந்து வெளிப்படும் வேப்ப கதிர்கள் அவர்களின் உயிரணுக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட கூட வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
மடிக்கணினியை பயன்படுத்தும் 18 முதல் 25 வயதுடைய ஆண்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப்பதுவதாக மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
மடிக்கனிகளை மடியில் வைத்து உபயோகப்படுத்தும் போது, கழுத்து வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். ஆகையால் மடிக்கனிகளை மேசையின் மீது வைத்து உபயோகிப்பது நல்லது.
பொதுவாக கணினிகளை அதிகமாக உபயோகப்படுத்தும் போது கண்கள் பாதிப்படைகிறது. எனவே கணினிகளை பயன்படுத்தும் போது சாதாரண கண்ணாடிகளையாவது அணிந்து பயன்படுத்துவது நல்லது.
author avatar
Castro Murugan

Leave a Comment