டிரம்ப்-க்கு எதிராக பேஸ்புக் பிரச்சாரமா? மார்க் ஸக்கர்பெர்க் மறுப்பு …!

நியூயார்க்:கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையின் தலையீடு இருந்ததாக குற்றசாட்டு எழுந்தது. குறிப்பாக டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறினர்.இதில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் தனக்கு எதிராக கூட்டாக பிரச்சாரம் மேற்கொள்வதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் சில தாரளாவாதிகள் டிரம்ப் வெற்றிக்காக மர்க் செயல்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் முடிவுகளை பேஸ்புக் மாற்றியது என்பது வேடிக்கையான ஒன்றாகத்தான் இருக்கும்.

பேஸ்புக் நிறுவனம் அனைத்து மக்களுக்குமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபடும். மேலும், தேர்தலுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பும் தேசிய அரசுகளுக்கு எதிராக பணியாற்றும் என மார்க் கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment