ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு !!!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர்  பொறுப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள செம்மலை, பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளையும் ஆகஸ்ட் 15-க்குள் இணைக்க பா.ஜ.க. கெடு விதித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Comment