ஷங்கருக்கு அடுத்து இவர்தான் : பிரபல இயக்குனர் ஓபன் டாக்

மெர்சல் படம் பல புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் பல சர்ச்சைகளுக்குள் சிக்கி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்ப்பை பெற்று வருகிறது.
 தரமான படங்களை கொடுத்த இயக்குனர்  வசந்தப்பாலன் இவரும் ஷங்கரின் உதவியாளராக இருந்தவர், இவர் தன் முகநூல்  பக்கத்தில் மெர்சல் குறித்து நீண்ட கருத்தை கூறியுள்ளார்.

இதில்  ‘இயக்குநர் ஷங்கர் அவர்களின் வருகைக்கு பிறகு சமுதாயப்பார்வை கொண்ட படங்களை கமர்சியலாக வழங்கும் முறை தமிழ் சினிமாவில் மேலும் வலுப்பெற்றது.

நிறைய இயக்குநர்கள் முயற்சித்தனர். இவருடைய பாணி படங்களை முயற்சித்து முழுவெற்றிக்கண்டவர்
இயக்குநர் முருகதாஸ். ரமணா திரைப்படத்தில் முருகதாஸ் மிக திறன்பட சமுதாய கருத்துகளை கமர்சியலாக முன்வைத்தார்,அதில் வெற்றியும் கண்டார்.
அதைத்தொடர்ந்து துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படத்திலும் சமுதாயக் கருத்துகள் மூலமாக இயக்குநர் முருகதாஸ் பெரு வெற்றியை பெற்றார்.
இன்று அந்த வரிசையில் இயக்குநர் அட்லி மெர்சல் திரைப்படத்தின் மூலம் சமுதாய மேம்பாட்டிற்கான கருத்துகளை கூறி கமர்சியல் வெற்றிக் கண்டுள்ளார்’ என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.