அமெரிக்கா அதிரடி: பாகிஸ்தானுக்கு இனி நிதி கிடையாது..,

வாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கிவந்த ரூ. 23 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்து உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீவிரவாதம் குறித்த வருடாந்திர அறிக்கையை அந்நாட்டு வெளியுறவுத்துறை சமர்பித்தது. அதில், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது. அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நடந்தது.
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க கடும் நிபந்தனைகளை விதிப்பது என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொள்வது தொடர்பாக டிரம்ப் அரசு தீவிரம் காட்டுகிறது.
இந்தநிலையில் ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்கம் மீது பாகிஸ்தான் போதுமான நடவடிக்கையை எடுத்ததாக அறிக்கை தாக்கல் செய்யமுடியவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு குழுவிற்கு இந்த அறிக்கையானது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு 350 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை நிறுத்த அமெரிக்க முடிவு எடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
source: oneindia.com
author avatar
Castro Murugan

Leave a Comment