வரலாற்றில் இன்றுதான் தமிழ்நாட்டுடன் இணைக்கபட்டது கன்னியாகுமரி…!

வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1956. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் “குமரித் தந்தை ” என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.
இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.