இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அமைதி நிலை உருவாக ஆயிரக் கணக்கான இஸ்ரேலிய, பாலஸ்தீனிய பெண்கள் கலந்து கொண்ட சமாதானத்திற்கான பேரணி.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நாடுகள், நமது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் போன்றதுதான் அவ்வப்போது இருநாடுகளுக்கும் இடையே போர் நடக்கும், இராணுவ மோதல்களும் நடக்கும்….

1946 ஆம்  ஆண்டு துவங்கி பாலஸ்தீனத்தை படிப்படியாக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ஆக்கிரமிக்க துவங்கினர் யூதர்கள்(இஸ்ரேல்)…. அதன் இறுதிகட்ட வடிவம் தான் தற்போதைய இஸ்ரேல் என்னும் நாடாகும்…

ஆகையால் தற்போதைய இஸ்ரேல் நாடானது அமெரிக்காவின் ஆயுத கிடங்கானது..மேலும் ராணுவ கூட்டாளியாகவும் மாறிப்போனது.ஆகையால் இஸ்ரேல் நாடு தொடர்ந்து தனது அடக்குமுறையை பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்து கொண்டே இருக்கிறது. இதனால் பல்லாயிறக்கணக்கான உயிர்கள் சூறையாட படுகின்றன.

 ஆகவே அந்த நிலை மாறிட வேண்டியும்,இரு நாடுகளும் தங்களது போர் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் ஆயிரக் கணக்கான இஸ்ரேலிய, பாலஸ்தீனிய பெண்கள் கலந்து கொண்ட சமாதானத்திற்கான பேரணி.

Leave a Reply

Your email address will not be published.