இனி ரயில்களில் போர்வை, கம்பளிகள்-ரயில்வே துறை அறிவிப்பு..!

ரயில் பயணிகளுக்கு பெரும் நற்செய்தி  நீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்யும்போது வழங்கப்பட்டு வந்த போர்வை, கம்பளிகள் வசதிகளை மீண்டும் தொடங்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில்வே சார்பில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும்  படுக்கைகள் வழங்கப்பட்டு வந்தது. ரயில்வே வழங்கிய இந்த வசதி 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அளித்த உத்தரவில், ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும்  படுக்கைகள் வசதிகளை மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த வசதி நிறுத்தப்படாதல்  பயணிகள் போர்வையுடன் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

 படிப்படியாக வசதிகள்:

கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, 2020ல் முன்னெச்சரிக்கையாக ஏசி பெட்டிகளில் கொடுக்கப்பட்ட இந்த வசதியை ரயில்வே நிறுத்தியது.  தற்போது  கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட  கட்டுப்பாடுகள் படிப்படியாக அரசு விலகி வருகிறது.

முன்பதிவு செய்யப்படாத பெட்டி:

வரும் 27 முதல் சர்வதேச விமானங்களைத் தொடங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை ரயில்களில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான பயணிகள் முன்பு போல் மலிவான டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும் . இதனால், பயணிகளுக்கு மிகுந்த நிம்மதி ஏற்பட்டுள்ளது.

author avatar
murugan