கோவில் தளத்தை துடைத்த பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு…!

பிஜேபியின் ஜனாதிபதித் தேர்வான திரௌபதி முர்மு புதன்கிழமை தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள சிவன் கோயிலின் பிரார்த்தனை செய்வதற்கு முன் தரையைத்  துடைத்துள்ளார்.

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். பிஜேபியின் ஜனாதிபதித் தேர்வான திரௌபதி முர்மு புதன்கிழமை தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள சிவன் கோயிலின் பிரார்த்தனை செய்வதற்கு முன் தரையைத்  துடைத்துள்ளார். இந்த வீடியோ ஆணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment