விநாயகர் சதூர்த்தி விழா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது…!

ஆந்திர பிரதேசத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் கொரோனா பரவல் தற்பொழுது குறைந்து உள்ளது. இருப்பினும், கொரோனா 3 ஆம் அலை பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் விழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூட கூடிய இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி விநாயக சதுர்த்தி விழாவின் பொழுது, பொது மக்கள் அதிகமாக கூட கூடாது எனவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அது போல ஆந்திர பிரதேச மாநிலத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவர் சோமு வீராஜு மற்றும் மாநில பொதுச் செயலாளர் விஷ்ணு வர்தன் ஆகியோர் மற்ற கட்சி தலைவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாடுகளின் படி தான் ஆந்திர மாநிலத்தில் விநாயக சதுர்த்தி விழாவிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் முடிவை அரசியல் ஆக்குவதற்காக மாநில பாஜக தலைவர்கள் இவ்வாறு போராட்டங்கள் நடத்துவதாகவும், மேலும் இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal