பா.ஜ.க.வில் சேர கட்டாயப்படுத்தினார்கள்..! அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜகவில் இணையுமாறு தான் வற்புறுத்தப்பட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதாக கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது.

இதையடுத்து அவர் கைதாவாரா என்ற பரபரப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “எனக்கு எதிராக எந்த ஒரு சதி திட்டத்தையும் தீட்டலாம். நானும் உறுதியாக இருக்கிறேன். அதாவது, நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கப்போவது இல்லை.

5 முறையும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்! நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை

பாஜகவில் சேர்ந்து விடுங்கள். அப்போது உங்களை விட்டுவிடுகிறோம் என்று என்னிடம் கூறினார்கள். தொடர்ந்து அக்கட்சியில் இணைய என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டேன். நான் கைதானாலும் டெல்லி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படாது” என்று பேசினார்.

Leave a Comment