மகாராஷ்டிராவில் இனி பாஜக ஆட்சி! தொடரும் பாஜக-சிவசேனா இழுபறி!

மகாராஷ்டிரா மானியத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு  சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும்  கைப்பற்றியுள்ளது.
இதில் பாஜக சார்பில் தேவேந்திர பத்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இனி 5 ஆண்டுகள் பாஜக அரசு தான் ஆளுங்கட்சி என குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.  இந்த போக்கு சிவசேனாவிற்கு பிடிக்கவில்லை.
சிவசேனா கட்சியினர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தனர். இதுகுறித்து பாஜக மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் பேசி வருவதால், நாளை அல்லது நாளை மறுநாள் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிஸ் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. இன்று பாஜக எம்எல்ஏக்களின் கூட்ட தொடர் நடைபெற உள்ளது. இதிலும் முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.