பாஜக ஆர்ப்பாட்டம்.. நெய்வேலி கிளிக்.. ட்வீட்டரில் முதலிடம் பிடித்த தளபதி..!

இந்த ஆண்டு இந்திய அளவில் ட்வீட்டரில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் தான் என்று ட்வீட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடைபெறும் பொழுது வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தினர் அதற்கு பிறகு நேரடியாக நெய்வேலிக்கு சென்று விஜயிடம் விசாரணை நடத்தினார் பிறகு விசாரணை நடைபெற்று முடிந்தவுடன் நடிகர் விஜய்  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்  அப்போது அங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் . இந்த தகவலை கண்ட விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் கூட்டமாக அப்பகுதியில் கூடினார்கள்.

பிறகு நடிகர்  விஜய் படப்பிடிப்பு முடித்துவிட்டு ரசிகர்களை பார்த்த விஜய் அங்குள்ள பேருந்தின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். உடனடியாக அந்த செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழ் சினிமாவில் ட்வீட்டரில் அதிகம் லைக்ஸ் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றது.

இதனை தொடர்ந்து ட்வீட்டர் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி தான் என்று அதிகார்வ பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #VIJAYRuledTwitter2020 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.