அதிகரிக்கும் தெருநாய்களின் அச்சுறுத்தல்..! பாஜக தலைவர் விஜய் கோயல் மற்றும் ஆர்டபிள்யூஏக்கள் போராட்டம்..!

டெல்லியில் தெருநாய்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக பாஜக தலைவர் விஜய் கோயல் மற்றும் ஆர்டபிள்யூஏக்கள் போராட்டம் நடத்தினர்.

சமீபத்தில் தெருநாய்களின் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் அதிகமாகிவரும் நிலையில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் தெருநாய்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக பாஜக தலைவர் விஜய் கோயல் மற்றும் பல குடியிருப்போர் நலச் சங்கங்களின் உறுப்பினர்கள் (RWAs) போராட்டம் நடத்தினர்.

சிறுவர்கள் மரணம் :

சமீபத்தில், வசந்த் குஞ்ச் என்ற இடத்தில் சகோதரர்களான ஆனந்த் மற்றும் ஆதித்யா ஆகிய இருவரையும் தெரு நாய்கள் கடித்துள்ளது. நாய்கள் கடித்த இரண்டு தினங்களில் இருவரும் இறந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த போராட்டம் நடந்துள்ளது.

stray dog menace 2

அவசரக்கூட்டம் :

கடந்த செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற அவசரக்கூட்டத்தில் தெருநாய்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த ஒரு வாரத்திற்குள் செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சருமான கோயல், தெருநாய்கள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளை டெல்லி அரசு அமல்படுத்தாததால் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

Meyor Priya 1

சுற்றுலா பயணிகள் பயப்படுகிறார்கள்:

“தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் மக்கள் நிம்மதியாக வெளியில் செல்ல முடியவில்லை. தெருக்களில் நாய்கள் மக்களைக் கடிக்கின்றன. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட டெல்லிக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

stray dog menace 1

ஆறு மாதங்களில் 58,000 வழக்குகள் :

கடந்த ஆறு மாதங்களில் 58,000 நாய்கள் கடிக்கப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், ஓவ்வொரு மணி நேரத்திற்கும் 10 முதல் 12 நாய் கடி சம்பவங்கள் நடக்கின்றன என்றும் டெல்லி அரசும், டெல்லி மாநகராட்சியும் (எம்சிடி) உடனடி நடவடிக்கை எடுத்து அச்சுறுத்தலைத் தடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment