29 C
Chennai
Wednesday, June 7, 2023

#BiparjoyCyclone: தீவிர புயலாக மாறியது “பிபோர்ஜோய்” புயல்.!

அரபிக்கடலில் வலுவடைந்தது "பிபோர்ஜோய்" புயல். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய...

Tamil News Live Today: தங்கம் விலை உயர்வு..! சவரன் ரூ.44,800க்கு விற்பனை..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு...

பெண் மருத்துவரின் ஹிஜாப் விவகாரம்… கட்சி நிர்வாகி கைது.! பாஜகவினர் போராட்டம்.!

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை வீடியோ எடுத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் கைது செய்யப்பட்டார். 

சில தினங்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அரசு ஆரம்ப சுகாதர நிலைத்தில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஜன்னத்திடம் , பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் , ஜன்னத் அணிந்து இருந்த ஹிஜாப் குறித்து கேள்வி எழுப்பி பணியில் இருக்கும் போது மருத்துவர் உடை ஏன் அணியவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண் மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்தார்.

பெண் மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது, மருத்துவர் ஜன்னத் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பெயரில் புவனேஷ் ராமை தேடி வந்த போலீசார், நேற்று  கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி , திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.