29 C
Chennai
Wednesday, June 7, 2023

கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட.விவகாரம் ! விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் சீல்.!

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்...

ம.பி: எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது.!

மத்தியப்பிரதேசத்தில் நேற்று இரவு எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு...

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்றுடன்...

தி கேரளா ஸ்டோரி பட இயக்குனர் சுதிப்தோ சென் மருத்துவமனையில் அனுமதி.!

இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டி சாதனை படைத்தது.

தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென், படத்துக்கான விளம்பர பயணங்கள் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் குணமடையும் வரை பல்வேறு நகரங்களுக்கு வரவிருக்கும் அனைத்து விளம்பரப் பயணங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த படமானது ஹிந்தி மட்டுமின்றி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது. ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.