கொரோனா எனும் ‘பயோ வெப்பன்’! 20 ட்ரில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பலரை பாதித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 19,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் அறியப்பட்டது. அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனை அடுத்து தற்போது பெரும்பாலான உலக நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது. 

தற்போது அமெரிக்கவிலும் பெரும்பாலானோருக்கு இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கும் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, அமெரிக்கா டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் உள்ள, வாஷிங்டன் நகரை சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவுடன் சேர்ந்து அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். 

அந்த வழக்கில், சீனா திட்டமிட்டு கொரோனா எனும் பயோ வாரை உலகம் முழுக்க பரப்பியுள்ளதாவும், அதற்கு நஷ்டஈடாக 20 ட்ரில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் எ

னவும் கூறப்பட்டுள்ளது. 

 

author avatar
murugan