உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவால் தான் வழங்க முடியும் - பில் கேட்ஸ்

இந்திய மருத்துவ துறையால் கொரோனா தடுப்பு மருந்தை உலகிற்கு வழங்க

By venu | Published: Jul 16, 2020 04:57 PM

இந்திய மருத்துவ துறையால் கொரோனா தடுப்பு மருந்தை உலகிற்கு வழங்க முடியும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே தான்  இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றிகண்டால் அதை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் தொழிலதிபர் பில்கேட்ஸ், இந்திய மருத்துவ துறையால் தங்கள் நாட்டிற்கு மட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு மருந்தை உலகிற்கு வழங்க முடியும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.முக்கியமானவை பல இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனாவிற்கான மருந்து கண்டு பிடிப்பதற்காக சிறப்பான உதவிகளை இந்திய மருத்துவத்துறை செய்து வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc