Bihar Election 2020: டிரம்ப் போராடினார், பிரதமர் மோடி இந்தியாவை காப்பாற்றினார் – ஜே.பி.நட்டா

கொரோனா வைரஸ் தொற்றுநோயை இந்தியாவிலிருந்து மோடி அரசு சிறப்பாக கையாள முடிந்தது என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், மறைமுகமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, டிரம்பை விட பிரதமர் நரேந்திர மோடி இந்த கொரோனா தொற்று நோயை சமாளிப்பதில் வெற்றி பெற்றார் என்றார் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, அமெரிக்க தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் கொரோனாவை சரியாக கையாள முடியவில்லை என்பதால் தான் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் பின்னடைவை சந்திக்கிறார். ஆனால், மோடி சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்து நாட்டின் 130 கோடி மக்களை காப்பாற்றினார்  என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் ஜே.பி.நட்டா.

இதற்கிடையில், பீகார் சட்டமன்றத் தேர்தலின் கடைசி கட்டத்திற்கான பிரச்சாரம் நேற்று முடிவடைந்து. நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.