பீகாரில் மதுவிலக்குக்கு பின் குற்றங்கள் குறைந்துள்ளது – பீகார் முதல்வர் நிதீஷ் குமார்!

மதுவிலக்கு அமல் செய்த பிறகு பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதல்வராகிய நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தி உள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை செய்பவர்கள், குடிப்பவர்கள் மற்றும் மதுவை பதுக்கி வைப்பவர்களுக்கு 10  ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பாட்னாவில் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தி இருப்பதால் எனக்கு எதிராக பலர் திரும்பி உள்ளனர். ஆனால் நான் இந்த கருத்தில் தீவிரமாக இருக்கிறேன்.

மக்களிடம் கேட்டபோது ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறார்கள். எனவே நானும் மதுவுக்கு எதிராக நிற்கிறேன். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின் குற்றங்கள் அதிகரிக்கவில்லை. மாறாக குற்றங்கள் அனைத்தும் குறைந்துள்ளது. அப்படி ஏதாவது குற்றங்கள் நடந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal