biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள்ள யாரு வந்திருக்காங்கனு பாருங்களேன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும்விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகிற நிலையில், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் மற்றும் மஹத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.