#BigBreaking : அதிர்ச்சி…! இந்தியாவில் 4 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…! 3,523 பேர் உயிரிழப்பு…!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 4,01,993 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும்,  உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 4,01,993 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,91,64,969 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,11,853 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 2,99,988 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 32,68,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.