“நம்முடைய ரத்தத்தில் பகத்சிங் “

இன்றைய சமூக சூழ்நிலையில் இந்த மண்ணுக்காக முற்றாக தன்னை அர்பணித்துக் கொண்ட மகத்தான மனிதர்களை சிந்திப்பதற்கு கூட நமக்கு நேரமில்லாமல் போய் விட்டது.நம் வாழ்வை வளப்படுத்துவதற்க்காக , நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக நாம் ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காக நமக்கு எழுத்து சுதந்திரம் , கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நினைத்தால் ஒரு அரசை மாற்றும் சுதந்திரம் யாரை நினைக்கிறோமோ அவர்களை அரியாசனத்தில் ஏற்றும் சுதந்திரம் இப்படி எல்லா சுதந்திரமும் பெறுவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களை நினைத்து நன்றி பாராட்டுகிற நல்ல குணம் கூட இன்றைக்கு நம்மிடம் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

சிறந்த கருத்துக்களை , சிறந்த செய்திகளை நாம் வாழும் இந்த சமூகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற வெறி ஒவ்வொருவருக்கும்  இருக்கிறது.ஆனால்  அதற்குரிய களம்  இன்றைக்கு இல்லை என்பதுதான் உண்மை.இந்திய தேசம் “இளைஞசர்களின் கையில் தான்” என்று இன்றைக்கு சொல்கிறார்கள்.அது நம்முடைய சுதந்திர போராட்டத்தில் இளைஞசர்கள் நடத்திய போராட்டத்தில் இளைஞசர்கள் செய்த தியாகத்தின் சான்றே என்பதை நாம் புறம் தள்ளிவிட முடியாது.கடந்த காலத்தில் நாம் உலகமே திரும்பி பார்க்கும் “மெரீனா புரட்சி” , ” தை  புரட்சி ” என்று வருணிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம்.ஆனால்  இந்த அரசாங்கம் நம்மை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை கொண்டாட விடவில்லை. போராட்டக்காரர்கள் உள்ளே தீவிரவாதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கலவரமாக மாற்றினார்கள்.

சமீபத்தில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டம் , நீட் , எட்டுவழிச்சாலை , என அனைத்து விதமான போராட்டத்திலும் படிக்கின்ற மாணவர்களும் , இளைஞசர்களும் நிற்கின்றார்கள். சிறை செல்கிறார்கள் , வழக்குகளை சந்திக்கிறார்கள் ஏன் துப்பாக்கி குண்டுகளுக்கு பழியும் ஆகுகிறார்கள் என்றால் நாம் அதை காலத்தின் சூழல் , அடக்குமுறையுயின்  கட்டமைப்பு என்று கடந்து சென்று விட முடியாது.காரணம் நம்முடைய ரத்தத்தில் கலந்துள்ள 200 ஆண்டுகால சுதந்திர போராட்ட உணர்வு அதன் தாக்கத்தின்  வெளிப்பாடு என்றுதான் பார்க்க வேண்டும்.அப்படி இளைஞசர்களின்  நாயகனாக , வீரனாக , தியாகியாக இருந்த மாவீரன் பகத்சிங்_ கின் இன்றும் நம் ரத்தத்தில் வாழ்கிறார் என்றால் அது மிகை ஆகாது.

பகத்சிங் பற்றி பேசினாலே இந்த அரசாங்கம் பயங்கரவாதம் , டெரரிஸஷம்  என்று ஆட்சியாளர்கள் முத்திரை குத்துவார்கள்.இப்படி மாவீரன் பகத்சிங்கை  பயங்கரவாதம் , டெரரிஸஷம் என்று சொல்லி அவரின் தியாகத்தை போராட்டத்தை கொச்சை படுத்துகிறார்களோ அதே போல வே நம்மையும் ஜல்லிக்கட்டு , ஸ்டெர்லைட் , 8வழி  சாலை , நீட் இப்படி ஏராளமான போரட்டத்தில் நம்மீதும் இதே முத்திரை குற்றபடுகிறது , தண்டிக்க படுகிறோம்.காரணம் நம் அனைவரின் ரத்தத்தில் பகத்சிங்கை பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இன்று  பகத்சிங்கின் பிறந்த நாள் 1907ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம்  27 ஆம் தினம் இந்தியாவின் மேற்கு பஞ்சாப்பில் பிறந்தார்.தற்போது மேற்கு பஞ்சாப் பாக்கிஸ்தானில் உள்ளது.நம்முடைய இரத்தத்தில் கலந்துள்ள  புரட்சிகர ஹீரோ பகத்சிங்கின் பிறந்த நாளில் அவரின் தியாகத்தை அனைவரிடமும் கொண்டு செல்வோம் “இன்குலாப் முழக்கத்துடன்” .

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment