ஜாக்கிரதை மக்களே! பீட்சா ஆசையில் ரூ.44 ஆயிரத்தை இழந்த பெண்!

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ்.

பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்துள்ளார். வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு வந்து சேரவில்லை என்றும், நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு சில தினங்களில் வந்துவிடும் என கூறி, அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

அதன்பின் சில மணி நேரங்களில், அந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.43 ஆயிரத்து 900 மற்றொரு வங்கிக்கணக்கிற்கு தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நூதன முறையில் பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடிவருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.