பெங்களூரு: தாயை கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த மகன்!

பெங்களூரு: கேஆர் புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமியா லேஅவுட்டில் நேற்று காலை 40 வயது (தாய்) பெண் தனது இளம் (வயது 17) மகனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த நேத்ரா என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டது.

தகராறு காரணமாக டிப்ளமோ படித்துவரும் இளைஞன், அவரது தாய் நேத்ராவை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின், காவல் நிலையத்திற்கு சென்று அந்த இளைஞன், தனது தாயைக் கொன்றுவிட்டேன் என கூறி சரணடைந்தார். இதுதொடர்பாக காவல்துறை கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் முல்பாகலில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார்.

காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு.. பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல இருந்த அந்த இளைஞனை அவரது தாய் திட்டியுள்ளார். சம்பவம் நடந்த போது வீட்டில் நேத்ரா மற்றும் அவரது மகன் மட்டுமே இருந்துள்ளனர். இந்த சம்பவ நடந்த இடத்திற்கு ஒயிட்பீல்ட் துணை போலீஸ் கமிஷனர் சிவக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

இதனால், தாயை கொன்ற மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது, தாயார் தன்னை முறையாக பார்த்து கொள்ளவில்லை என்றும் சரியான உணவு தருவதில்லை எனவும் இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரிக்கு புறப்படும்போது தாய் திட்டியதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment