மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓடும் போட்டி-வெற்றி பெற்றால் எடைக்கு நிகரான பீர் !

பின்லாந்து நாட்டில் 1992-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு வினோதமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பின்லாந்தில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓட வேண்டும்.

கணவர்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓடம் பாதையில் பல தடைகள் இருக்கும்.அவற்றை அனைத்து தடைகளையும் தாண்டி தங்கள் மனைவியை தூக்கி கொண்டு இலக்கை அடைந்தால் மனைவியின் எடைக்கு சமமாக பீர் பரிசாக வழங்கப்படுவது வழக்கம்.

இந்த வினோதமான போட்டியில் சில நாள்களுக்கு முன் பின்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில்  அமெரிக்கா ,ஆஸ்திரேலியா ,பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து பல தம்பதிகள் கலந்து கொண்டனர்.

Related image

இப்போட்டியில் பல தம்பதிகள் தடுக்கி கீழே  விழுந்தனர்.இதில் லித்துவேனியா  நாட்டை சார்ந்த ஒரு தம்பதி வென்றனர்.இப்போட்டியில் வென்ற அந்த தம்பதியின் மனைவிக்கு எடைக்கு நிகராக பீர் பரிசாக கொடுக்கப்பட்டது.

இந்த போட்டியை பற்றி கணவர்களிடம் கேட்கும் போது தங்கள் மனைவியை தோளில் சுமந்து ஓடுவது ஒரு சுகமான அனுபவம் என கூறினார்கள்.

 

author avatar
murugan