“இந்தியாவே உறுதியாக இருங்கள்” – ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் ஒளிரும் விளக்குகள்!

ஸ்டே ஸ்டிராங் இந்தியா என ஆஸ்திரேலியா பல்கலைகழகத்தில் இந்தியா கொரோனாவை வெல்லும் என நம்பிக்கை அளிக்கும் விதமாக வாசகத்துடன் நியூ சவுத்வேல்ஸ்  பல்கலைக்கழகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவமனை உபகரணங்கள் பற்றாக்குறை, படுக்கையறை வசதி குறைவு என இந்தியா பல்வேறு நெருக்கடியிலிருந்து வருகிறது.

எனவே, இந்தியாவிற்கு மற்ற பிற நாடுகள் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என தெரிவித்து வருவதுடன், தங்கள் நாடுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களையும் அனுப்பி வருகின்றனர். இதனையடுத்து தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமாகிய நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஸ்டே ஸ்டிராங் இந்தியா, அதாவது இந்தியாவே உறுதியாக இருங்கள் என வாசகம் பொருத்தப்பட்ட மின்விளக்குகளால் அந்த பல்கலைக்கழகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வரக்கூடிய இந்திய மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal