பெங்களூர்: குணமடைந்த கொரோனா நோயாளி..! மருத்துவருடன் நடனம்.!!

bangalore dance

பெங்களூர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவருடன் இணைந்து நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூர் நகரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதியுற்றுள்ளார். பல போராட்டத்திற்கு பிறகு இவருக்கு பெங்களூர் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்துள்ளது. பின்னர் சிகிச்சையை முறையாக எடுத்துக்கொண்டு குணமடைந்துள்ளார். குணமடைந்து வீடு திரும்பும் உற்சாகத்தில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இவர்கள் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.