தயாரிப்பாளரான மாரி பட இயக்குனர்! முதல் படமே ஹீரோ யோகிபாபுவுடன் தான்!

காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அடுத்தடுத்து மாரி, மாரி 2 ஆகிய படங்களையும் ஆஸ் ஐயம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்கிற வெப் சீரிஸையும் எடுத்துள்ளார்.

இவர் தற்போது ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த படத்தை மடோனே அஸ்வின் என்பவர் இயக்க உள்ளார். மண்டேலா என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று திருநெல்வேலியில் தொடங்கியுள்ளது. படம் பற்றிய மேலும் தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.