கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!

பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதால் அதற்கான எப்ஐஆர் என்னுடன் மனுத்தாக்க செய்ய ஆணையிட்டுள்ளது. சிபிசிஐடி புதிய தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் சிறையில் உள்ள 5 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment