ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ஆய்வு – மத்திய அரசு..!

புதியதாக கண்டறியப்பட்டுள்ள ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் பரவி வரும் ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ICMR ஆய்வை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருவரை 10 பேருக்கு ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மஹாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்யபோது ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா கண்டறியப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இந்தூர் சுற்று வட்டாரங்களில் 6 பேருக்கு ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏ.ஒய் 4.2 என்பது சார்ஸ் கோவிட்2 வைரஸின் டெல்டா மறுபாட்டின் துணை பிரிவு என்றும் மிக வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ICMR  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா பிரிட்டனில் அதிகம் பரவுகிறது. இதனால், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் முககவசம் , தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

author avatar
murugan