இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; சிப்தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.!

PM Semicon2023

இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு உலக சிப் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற “செமிகான் இந்தியா மாநாடு 2023” தொடக்கவிழாவில் பேசிய பிரதமர்  மோடி, உலகளாவிய குறைக்கடத்தி(Semi Conductor) தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுத்து பேசியுள்ளார். முதலில் வருபவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் வலியறுத்தியுள்ளார். நீங்கள் இந்திய மக்களுக்காக சிப் உருவாக்கும் சமுதாயத்தை மேம்படுத்தவேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். குஜராத்தில் நடைபெற்ற இந்த செமிகான் … Read more

யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம்… உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

Temple Priest HC

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்றால், யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகும் உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் பணிநியமனத்திற்கு விளம்பர அறிவிப்பு வெளியாகியிருந்தது, இதைஎதிர்த்து அந்த கோயிலின் முத்து  சுப்ரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், நீதிபதி சம்மந்தப்பட்ட கோயிலின் ஆகம முறைகள் படித்திருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், அந்த கோயில் ஆகம விதிகளுக்குட்பட்டதா இல்லையா என்பதை பொறுத்து முடிவுசெய்யவேண்டும் எனவும் உத்தரவு அளித்திருந்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட … Read more

அண்ணாமலையின் பாதயாத்திரை; தொடங்கி வைக்கும் அமித்ஷாவின் பயணத்திட்டம்.!

Amitshah tn pad

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைக்கும் அமித்ஷாவின் இரண்டுநாள் தமிழக பயணத்திட்டம் இதுதான். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார பாதயாத்திரையாக, இன்று தமிழகம் முழுவதும் ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்த பாதயாத்திறையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்க உள்ளார். அடுத்த வருட நாடாளுமன்ற தேர்தல் குறித்த 234 தொகுதிகளிலும் பிரச்சாரத்தை, உள்துறை அமைச்சர் … Read more

வேளாண் சங்கமம் 2023, திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.!

Velan Sangamam2023

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில், வேளாண் சங்கமம் 2023 ஐ முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். திருச்சியில் வேளாண் சங்கமத்தை (2023) துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில், வேளாண் சங்கமம் எனும் விவசாயக் கண்காட்சியை திறந்துவைத்தார். அப்போது அவர் கூறும்போது விவசாயிகளின் நீர்பாசனத்திற்காக நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, வேளாண்மை செய்ய கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே 1,50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், … Read more

வேற்றுக்கிரக பறக்கும் தட்டு அமெரிக்காவிடம் இருக்கிறது; முன்னாள் உளவுத்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்.!

US UFO UAP

அமெரிக்கா அரசிடம் வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் இருப்பதாகக் முன்னாள் உளவுத்துறை அதிகாரி தகவல். காங்கிரஸின் கமிட்டி கூட்டத்தில் பேசிய அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ், வேற்றுக்கிரக அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் மற்றும் மனித உயிர் அல்லாத வேற்றுக்கிரகத்தைச்சேர்ந்த உடல்கள் மீட்கப்பட்டு அமெரிக்க அரசு மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தான் இதனை வெளியே சொன்னதற்கு தன் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறினார். தன்னுடன் அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்களில் சிலர், இந்த வேற்றுகிரக … Read more

அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

TN Secretary office go

பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என உத்தரவு. தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைக் குறிப்பிட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர், அறிக்கை வெளியிட்டுள்ளார், அதன்படி பள்ளிக்கல்வித்துறை அரசு அலுவலக பணியாளர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிடவேண்டும் எனவும் வருகைப்பதிவு, ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிடவும், மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தவும் வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனைத்து பேராசிரியர்கள், இயக்குநர்கள், கல்வி அலுவலர்கள் என அனைவருக்கும் இந்த அரசின் 2021 ஆம் ஆண்டு அறிக்கையை … Read more

சிறப்பு பிரிவினருக்கு மருத்துவ கலந்தாய்வு; சென்னையில் இன்று தொடக்கம்.!

medical counselling mbbs

மருத்துவப்படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது. நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. விளையாட்டுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வாரிசுகள் பிரிவு, 7.5% அரசுப்பள்ளி மாணவர்களும் இந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

நைஜர் அதிபரை உடனடியாக விடுவிக்க வேண்டும்-அமெரிக்கா வலியுறுத்தல்.!

niger prez

நைஜரின் அதிபர் மொஹம்மது பாஸூமை  உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. நைஜரில் இராணுவப் படையினர் அதிபர் மொஹம்மது பாஸூமை அவரது ஜனாதிபதி மாளிகையில் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்து, அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. நைஜரில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்கா, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நாங்கள் ஆதரிக்கிறோம். வலுக்கட்டாயமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் எந்தவொரு … Read more

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை; வானிலை மையம்.!

IMD ChennaiRain

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழகத்தின் வட பகுதிகளில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எனது அடுத்த ஆட்சியில், இந்தியா உலகின் 3-வது மிகப்பெரும் பொருளாதார நாடாக மாறும்- பிரதமர் மோடி

PMModi 3rdLEco

3 வது முறை அமையவுள்ள எனது ஆட்சியில், இந்தியா உலகின் 3-வது  மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (IECC) வளாகம் மறுசீரமைக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாரத் மண்டபம் என மறுபெயரிடப்பட்ட அதன் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தனது மூன்றாவது ஆட்சியில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்றும், நாட்டின் வளர்ச்சிப் பயணம் நிறுத்தப் போவதில்லை என்றும் … Read more