நமது கல்வி முறை, இந்திய பாரம்பரியங்களை பாதுகாப்பதோடு அறிவியலிலும் முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்.!

PMModi akilshiksha

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியல் இரண்டையும் நமது கல்விமுறை பாதுகாப்பதோடு வளர்த்தும் வருகிறது என பிரதமர் பேச்சு. இன்று பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு மற்றும், அகில் பாரத சிக்ஷா சமகம் இரண்டையும் பிரதமர் மோடி, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தொடங்கிவைத்தார். தேசிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று பிரதமர் மோடி இந்த நிகழ்வுகளை துவக்கிவைத்தார். அதன்பிறகு திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நமது கல்வி முறை … Read more

டி-20 உலகக்கோப்பைக்கான தேதிகள் வெளியானது… ஐபிஎல் தொடரும் இதனால் மாறுமா.?

iCC t20WC US

2024 ஆம் ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கான நடத்தும் உரிமை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு நாடுகளும் ஏற்றுள்ள நிலையில் ஐசிசியும் அதற்கான அனுமதியை மீண்டும் வழங்கிய நிலையில், தொடரை அக்டோபர் மாதத்திலிருந்து ஜூன் மாதம் நடத்த அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான பதிப்பு, ஜூன் 4 … Read more

BREAKING: துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைஃபிலில் இளவேனில் வலறிவன் தங்கம் வென்று அசத்தல்.!

Ilavenil valarivan gold

மகளிருக்கான ஏர் ரைஃபில் 10 மீ போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வலறிவன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வலறிவன், துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைஃபிலில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். இவர் இந்தியாவுக்காக பலமுறை தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் கடந்த 2019யிலும் நடந்த விளையாட்டு போட்டிகளில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

அகில இந்திய கல்வி மாநாடு; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.!

PMModi aiep

தேசிய கல்விக் கொள்கையின் (NEP) மூன்றாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் கொண்டாடும், ‘சிக்ஷா சமகம்’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் வந்தடைந்த பிரதமர் மோடி, NEPஇன் மூன்றாண்டு நிறைவை கொண்டாடும் அகில இந்திய கல்வி மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் மாணவர்கள் தங்களது அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக சிக்ஷா சமகம் செய்லபடும் என தொடக்க விழாவில் பிரதமர் … Read more

MLC 23:இரண்டாவது தகுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ் தோல்வி… பைனலில் மும்பை நியூயார்க்.!

MIny23fMLC

பைனலுக்கு செல்லும் இரண்டாவது அணி எது என்பதில் நடந்த சேலஞ்சர் போட்டியில் சூப்பர் கிங்க்ஸை வீழ்த்தி மும்பை நியூயார்க் தகுதி. அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் அறிமுக சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று (சேலஞ்சர்) போட்டியில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை நியூயார்க் மற்றும் முதல் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூயார்க் அணி பந்துவீச்சை தேர்வு செய்து, … Read more

மஹாராஷ்டிராவில் சோகம்! இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து… 6 பேர் பலி.!

MH Accident6

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில், இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், பெண்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் பேருந்து நசுங்கியதில் பலத்த காயமடைந்துள்ளனர். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில், இதே மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

என்.எல்.சி நிலம் கையகப்படுத்தலில் பயிர்களை அழித்ததற்கு உயர்நீதிமன்றம் வருத்தம்.!

NLC Land occHC

நெய்வேலியில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தும் போது, பயிர்களை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு உயர்நீதிமன்றம் கேள்வி. நெய்வேலியில் என்.எல்.சி தொழிற்சாலையில் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக கால்வாய் தோண்டும் பணிகளும் நடைபெற்று வந்தது. மேலும் இன்று தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டங்களும் நடைபெற்றது, இது தொடர்பாக என்.எல்.சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த நிலையில், போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பணியாளர்கள் வேலைக்கு … Read more

குற்றச்சாட்டு பதிவு அடிப்படையில் அமைச்சாராக நீடிக்க சட்டத்தில் எந்த தடையும் இல்லை.!

Madras Highc

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர் அமைச்சராக நீடிப்பதில் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையில், அமைச்சராக அவர் எந்த அடிப்படையில், அமைச்சராக நீடிக்கிறார் என  அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்ததில், அரசு தரப்பு தன் வாதங்களை முன்வைத்தது. அதன்படி அமைச்சரவைக்கு இணையான நிர்வாகம் நடத்தவும், தனிப்பட்ட முறையில் … Read more

பாதயாத்திரை தொடங்கிவைக்க ராமேஸ்வரம் செல்கிறேன்; அமித்ஷா தமிழில் ட்வீட்.!

Amitshah rameshwaram tam

பாதயாத்திரையை தொடங்கி வைக்க ராமேஸ்வரம் செல்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை தொடங்கிவைக்க வருகை தரும் அமித்ஷா, ராமேஸ்வரம் செல்வதாக தமிழில் ட்வீட் செய்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பாஜக சார்பில் பாதயாத்திரை இன்று தொடங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் திரு. @narendramodi அவர்கள் முன்வைத்த … Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு… ஜூலை 31க்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் தான்.!

ITR Filelast

நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரியை கடைசி நாளான ஜூலை 31க்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும். வருமான வரி செலுத்துவோர்கள் நடப்பு நிதியாண்டுக்கான 2023-24 தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேதியான ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால், தாமதமாக செலுத்தும் அபராதத்தொகையுடன் டிசம்பர் 31க்குள் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5000 அபாரதத்துடன் தங்களது வருமான வரியை செலுத்தலாம். ஆண்டு வருமானம் ரூ. 5,00,000 ஐ தாண்டவில்லையென்றால், அவர்கள் தாமதக்கட்டணம் ரூ.1000 மட்டும் … Read more