கர்நாடக தேர்தல் – கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை!

Pramod Sawant

கர்நாடக தேர்தல் நாளில் கோவாவில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை கோவாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப் போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் … Read more

SDPI நிர்வாகி மற்றும் PFI முன்னாள் நிர்வாகியை கைது செய்தது என்.ஐ.ஏ!

NIA

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன், SDPI நிர்வாகி மற்றும் PFI முன்னாள் நிர்வாகி இருவரும் தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் கைது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிக் … Read more

மணிப்பூர் விவகாரம்! வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அமைச்சர்

Rajkumar Ranjan Singh

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தல். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.  மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக … Read more

மும்பை அணி தடுமாற்றம்.. சென்னை அணிக்கு 140 ரன்கள் இலக்கு!

chennai super kings

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடக்கத்திலேயே தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். ஆனால், மறுபக்கம் நேஹால் வதேரா … Read more

பிரிட்டன் மன்னராக முடிசூடினார் மூன்றாம் சார்லஸ்!

KingCharlesIII

பிரிட்டன் மன்னரின் முடிசூட்டும் விழாவில் இந்து ஒருவர் பைபிள் வாசித்தது இதுவே முதல்முறை. பிரிட்டன் மன்னராக ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் முடிசூடப்பட்டார். லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில், இளவரசர் சார்லஸ் முடிசூடிக்கொண்டார். சூப்பர் டூனிக்கா எனப்படும் தங்க அங்கி அணிந்து பாரம்பரிய அரியணையில் செங்கோல் ஏந்தி, மன்னராக முடிசூடிக் கொண்டார் மூன்றாம் சார்லஸ். மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை சூடினார் தேவாலயத்தின் பேராயர். … Read more

கூகுள் நிறுவன மாடியில் இருந்து குதித்து 31 வயது ஊழியர் உயிரிழப்பு!

Google US

அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்திலிருந்து 31 வயது நிரம்பிய பொறியாளர் குதித்து உயிரிழப்பு. நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தில் இருந்து 31 வயது சீனியர் மென்பொருள் பொறியாளர் குதித்து உயிரிழந்தார். கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தின் 14 வது மாடியில் இருந்து குதித்த அந்த நபரை, உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், இறந்துவிட்டதாக தெரிவித்ததாக என்று காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறை விசேரநயி மேற்கொண்டு … Read more

மணிப்பூர் வன்முறை! 54 பேர் உயிரிழப்பு..13,000 பேர் மீட்பு!

Manipur violence

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் … Read more

தடை உத்தரவு; தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அதிகாரமில்லை – ஐகோர்ட்

Chennai high court

தடை உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என உத்தரவு.  தேசிய பட்டியலின ஆணையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதித்த தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. மாதேபள்ளி கோயில் நில ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற … Read more

#CSKvsMI: தொடங்கியது எல்-கிளாசிகோ! டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு!

CSKvsMI

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முதல் பாதி முடிந்து, இரண்டாவது பாதி தொடங்கி பல்வேறு சுவாரஸ்யங்களுடன் நடைபெற்று வருகிறது. அதுவும், இந்த வாரம் rivalry வாரமாக அமைந்துள்ளது. இதில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோதுகின்றன. அதாவது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை … Read more

மல்லிகார்ஜுன கார்கேவை கொலை செய்ய சதி – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Mallikarjun Kharge

மல்லிகார்ஜுன கார்கேவைக் கொல்ல பாஜக செய்ய சதி செய்ததாக காங்கிரஸ் பரப்பரப்பு குற்றச்சாட்டு. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். சித்தாபூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப்பை ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டார். அதில், கர்நாடகாவின் சித்தப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், “கார்கேவின் … Read more