டி-20 தொடரில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை!

இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் முதலில்  விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் குவித்தது.இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லான்னிங் ஆட்டமிழக்காமல் 63 பந்தில் 133 ரன்கள் குவித்தார்.

பின்னர் 227 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.இந்நிலையில் 2014-ம் ஆண்டு அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் மெக் லான்னிங் 126 ரன்கள் அடித்து சாதனை படைத்து இருந்தார்.

அதன் பின் கடந்த ஜூன் மாதம் ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை காலீஸ் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்து முறியடித்தார்.தற்போது காலீஸ் சாதனையை மெக் லான்னிங் முறியடித்தார்.

author avatar
murugan