இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா..!

நேற்று ஆஸ்திரேலியா, இந்திய பெண்கள் அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டைகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 259 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 50 ஓவர் எட்டு விக்கெட் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இந்திய அணியில் மிடில் ஆர்டர் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி ரிச்சா கோஷ் சதத்திற்கு 4 ரன்கள் இருக்கும்போது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ரிச்சா கோஷ் 117 பந்துகளில் 13 பவுண்டரிகள் உட்பட 96 ரன்கள் எடுத்தார்.  55 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

ஒரு கட்டத்தில் இந்தியா 43.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. இருப்பினும் அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா (14), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (5) ,  அமன்ஜோத் கவுர் (4) ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். 36 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்த தீப்தி சர்மாவால் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. 

author avatar
murugan