சொதப்பல் ஆட்டத்தால் இந்திய வீராங்கனையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா வீராங்கனை முதலிடம்.!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி-20 தொடரின், லீக் ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது.  அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள்  அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, வெறும் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதிபோட்டியில் ஷபாலி வர்மா சொதப்பியதால் புள்ளிகளை இழந்து தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்