எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை!

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, திண்டுக்கல்லில் 3 மணிநேரம் கனமழை கொட்டியது. மேலும், கொடைக்கானலில் 4 மணிநேரமாக கனமழை கொட்டுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

ஏற்கெனவே, தென் மாவட்டங்களில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இன்னும் பல இடங்களில் தண்ணீர் முழுவதுமாக வடியா நிலையில் உள்ளது. கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பெரும் துயரத்தை சந்தித்ததனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.